மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற்பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை சார்ந்தவரானார். நாட்டில் அமைதியும் நன்மையும் இல்லாமல் துன்பத்துடன் தீமை நடந்தது. திருஞான சம்பந்தரை பற்றி அறிந்த மங்கையர்கரசியாரும் அமைச்சர்…
காஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார் மானக்கஞ்சாறனார். அந்தக் குலத்தின் தலைவர். மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்து அவர்தம் தேவைகளைப் பூர்த்தி…
திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் பிறந்தார் முருகர். மறையவர் குலத்தில் பிறந்தவர். மூன்று வேளையும் இறைவனுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். ஞான நெறியில் நிற்பவர். சிவபெருமான் பால் உருகும் மனத்தால் வழிபடும் பண்பினர். நால்தோறும் நால்வகை மலர் கொய்து…
நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார். அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். பகைவர்களுடன் தோற்றவர்…
சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் வேளான்குலத்தில் பிறந்தார் மூர்க்கர். திரு நீற்றை மெய்ப்பொருளாக கருதினார். தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அமுது படைத்தபின்னரே தான் அமுது உன்னும் பழக்கமுடையவர். ஒவ்வொருநாளும் இப்பணி தொடர அடியவர்கள் நிறைய வர தன் உடைமைகளை விற்று தொண்டு செய்தார். மேலும்…
மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் மூர்த்தியார் பிறந்தார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர். லிங்கத்திருமேனிக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது இவர் விருப்பமாகும். வடுக கருநாட்டு மன்னவன் மண் ஆசையால் மதுரைமீது படையெடுக்க மதுரை மன்னனால் ஆற்றல்மிக்க அந்த சேனையை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றான்….
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு என்ற பெயரும் உண்டு. அதை ஆண்ட மன்னர்கள் மலாடர்கள் எனப்பட்டனர். அவர்தம் வழியில் தோன்றியவர் மெய்பொருளார். அவர் சிவ வேடம் தரித்தவர் யாவராயினும் அவர்தம் கருத்தின் வழி பணி…
சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது. இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக்…
சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து…
சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார். சைவ சமயம் தழைத்தோங்க பயிற்சிப்பள்ளி அமைத்தார். சைவத்திற்கு அடிப்படை தொண்டு. சமயம் வளர தொண்டர்கள் தேவை. தொண்டர்கள் இல்லா அமைப்பு வளராது. நீண்ட நாள்வாழாது என்ற நுட்பத்தைப்…