பிறேமன் ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலயம்
Ilse-kaisen Str 24, 28327 Bremen
Tel : 0421 24 79 66 58
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]…
அரிசில்பரைப்புத்தூர்- அழகாப்புத்தூரில் புகழ்துணையர் பிறந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பசிநோயால் வருந்தினாலும் உள்ளம் தளராது இறைவனை நாளும் பூசித்து வந்தார். ஒருநாள் சிவலிங்கத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விக்கும்போது பசியின் மிகுதியால் உடலில் சோர்வு ஏற்பட்டு தண்ணீர் குடத்தை…
வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து ஒளியூட்டுதல் சிறந்த பணி என நினைத்தார். எனவே கோவிலில் விளக்கிட்டு பாடி வழிபட்டு…
ஆந்திரமாநிலம் பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் வேடமன்னன் நாகன் – தத்தை இருவருக்கும் முருகப்பெருமானை வேண்டி மகனாகப் பிறந்தார். குழந்தையின் உடல் திண்மையாக இருந்ததால் திண்ணன் எனப் பெயர் வைத்தனர். தம் குலத்தொழில் படி வில் வித்தைகளைக் கற்று தேறினார். திண்ணப்பருக்கு வயது…
விருதாசலம் அருகில் உள்ள பெண்ணாடகத்தில் வணிகர் குலத்தில் கலிக்கம்பர் பிறந்தார். இறைவனுடைய திருஅடியை மறவாதவர். தூங்கானைமடம் என்ற அவ்வூர் திருக்கோவிலில் தொண்டுகள் பல புரிந்தார். சிவன் அடியார்களுக்கு தொண்டு புரிவதில் ஆர்வம் உள்ளவர். ஒருநாள் தமது மாளிகையில் அமுது செய்யவந்த அடியார்களை அழைத்து துனைவியார்…
திருவொற்றியூரில் எண்ணெய் வணிகம் செய்யும் வணிககுலத்தில் கலியர் பிறந்தார். மிக்க செல்வம் படைத்தவர். திருவருள் நெறியில் திளைத்தார். பெருமானுக்கு விளக்கு ஏற்றி தொண்டு புரிந்து வந்தார். அவர் வறுமையிலும் தொண்டு செய்யும் செம்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட அவர் செல்வம் மறைந்தது. கலியருடைய அசையும் அசையா…
சேரநாட்டில் பெருமாக்கோதையார் வாழ்ந்து வந்தார். அஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தொண்டு செய்து வந்தார். காலை புனித நீராடி திருவெண்ணீறு அணிந்து பணிசெய்து மலர்கொய்து பெருமானுக்கு மாலை சூட்டு மகிழ்ந்திருந்தார். சேரநாட்டை ஆண்ட செங்கோற்பொறையன் அரசும் அதிகாரமும் நிலையல்ல. இறைவன் திருவடியடைந்து தவஞ்செய்வதே சிறந்தது என்று…
பல்லவ குலத்தில் பிறந்தவர் கழற்சிங்கர். சிவன் திருவடியை அன்றி வேறு ஒன்றையும் அறிவில் குறிக்கோளாக கொள்ளாது நாட்டை செவ்வனே அரசு புரிந்து வந்தான். சிவனுடைய கருணையால் வடநாடு சென்று பகைத்து நின்ற வடபுல மன்னரை வென்று நவநிதிகளை கைப்பற்றி அதன் மூலம் அரனுக்கு…
திருக்கடவூரில் காரி பிறந்தார். செந்தமிழை நன்கு ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதி வல்லுநர். மூவேந்தரிடமும் சென்று சொல் விளங்க பொருள் மறைந்து நிற்கும்படி பாடி உரியையும் விளக்குவார். மன்னர்கள் மகிழ்ந்து கொடுத்த பரிசினை கொண்டுவந்து சிவபெருமானுக்கு கோவில்களில் திருப்பணி செய்தார். அடியார்க்கு உதவிசெய்தார். வட…
புதுவை மாநிலத்தில் காரைக்காலில் வணிகர் குடியின் தலைவர் தனதத்தரின் மகளாக புனிதவதியார் பிறந்தார். குழைந்தையாய் வீடு கட்டி விளையாடும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்வார். வளர்ந்து திருமணப்பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நீதிபதி என்பவரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்வித்தார். தனது மகளுக்குத் தன் வீட்டறுகே…