- June 22, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
கணமங்கலம் என்ற புள்ள மங்கலம் ஊரில் தாயனார் தோன்றினார். வேளான் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள். அவர்களின் பணி செம்மையாக நடைபெற்று வந்தது.
தாயரின் தொண்டின் சிறப்பு உலகறியவும் அவரை ஆட்கொள்ளவும் கருதினார் சிவபெருமான். அதன் விளைவாக தாயரின் செல்வம் நாளுக்கு நாள் குறந்தது. செல்வம் இல்லா நிலை ஏற்பட்டபோது, தாயனார் நெல் அறிந்து தரும் கூலி வேளைக்குச் சென்றார். கூலியாகப் பெற்ற நெல்லில் செந்நெல்லை பெருமான் வழிபாட்டிற்கும், கார்நெல்லைத் தனக்கும் பயன்படுத்தினார். ஊரில் எங்கும் செந்நெல்லே விளந்தது. கார் நெல்லே இல்லை. கார் நெல் கிடைக்காமையால் உணவுக்கு தட்டுப்பாடு வந்தது. கிடைக்கும் கீரைகளை சமைத்து சாப்பிட்டனர். எப்படியிருப்பினும் இறை வழிபாட்டிற்கு செந்நெல் கிடைக்க மகிழ்வுடன் தொடர்ந்து அமுது படைத்து வழிபட்டார்.
நாட்கள் கடந்தன. கீரையும் கிடைக்கா நிலை. கணவன் மனைவி இருவரும் தண்ணீரையே அருந்தி வாழ்ந்தனர். பலநாள் உணவு இல்லாமையால் உடல் சோர்ந்தது. உள்ளம் தளராமல் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் பஞ்ச கவ்வியமும் எடுத்துக் கொண்டு கோவில் நோக்கி சென்றனர். வயல்வெளி குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி தாயனார் கீழே சாய்ந்தார். வயல் வெளியில் ஆண்டவனுக்கு வைத்திருந்த செந்நெல்லும் செங்கீரையும் சிதறிக்கிடந்தது.
இனி கோவிலுக்குப் போய் என்ன செய்யப் போகின்றோம் என் வழிபாடும் திருத்தொண்டும் இன்றோடு முற்றுப் பெற்றது. இனி வாழ்ந்து என்ன பயன் எனக் கருதிய தாயனார் அரிவாளைக் எடுத்து தன் கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது ஒருகரம் தாயரின் கையைத் தடுத்தது. பெருமான் விடைமேல் தோன்றி “நீ புரிந்த செயலால் நாம் மகிழ்வுற்றோம், நீயும் உன் மனைவியுடன் என்றும் நம் உலகில் வாழ்வாயாக” என அருள் செய்து அருளினார். அரிவாளால் தன் ஊட்டியை அரிந்ததால் அரிவாட்டாய நாயனார் என்ற பெயர் உண்டாயிற்று.