- June 26, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
சோழமன்னன் சுபதேவன்- கமலவதி ஆகியோர் மழலை வேண்டி தில்லைக் கூத்தபிரானை வேண்ட இறைவன் இராணியின் கருவில் திருவானைக்காவில் பெருமானுக்கு பந்தல் இழைத்து வழிபட்ட சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பேறு வேலை வந்தபோது இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூன்றுலகம் அரசாளும் என சோதிடர்கள் கூறினார்கள்.
அச்சொல் கேட்ட கமலவதி அவ்வாறு ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கும்படி என் காலைப் பிணித்து தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துக என்று சொல்ல அவ்வாறே செய்து ஒரு நழிகை கழித்துக் ஆண் குழந்தை பிறந்தது. காலநீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. குழந்தையைக்கண்ட தாய் என் கோச்செங்காணானோ என அழைத்து உயிர் நீக்கினாள். மன்னன் குழந்தையை வளர்த்து உரிய பருவத்தில் மணிமுடி சூட்டி தான் தவநெறியை சார்ந்து சிவலோகம் சென்றான்.
அவ்வாறு பிறந்த கோச்செங்கட் சோழர் திரு அருளினாலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு சைவத்திருநெறி தழைக்க நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டும் திருப்பணியை மேற்கொண்டார். வெண்ணாவல் மரத்தினூடே பெருமான் வீற்றியிருந்தருளும் நிலையில் அதனை கோவிலாக மாற்றினார். சோழநாட்டில் சிவபெருமான் திருக்கோவில்கள் பலவற்றை அமைத்து நிகழும் பூசனைக்கு பெரும் பொருள் வகுத்து செங்கோல் ஆட்சி நடத்தினார். தமிழ் நாட்டில் எழுபது மாடக் கோவில்களை அமைத்தார். திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடம் என்ற கோவிலைக் கட்டினார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகை கட்டுவித்து இறுதிவரை திருவடித்தொண்டு செய்து இறைவன் திருவடி அடைந்தார்.