எல்லாம் வல்ல ஸ்ரீ வரசித்திவிநாயகப் பெருமானின் தனிப் பெரும் கருணையினாலே பிரதி வருடம் 2010ம் ஆண்டு ஓர் இடத்தில் சுவாமி படங்களுடன் துவங்கப்பெற்று நித்திய பூஜை சிறப்பாக நடைபெற்று வந்தது. பின் வரசித்திவிநாயகரின் கருணையினாலே 2018ம் ஆண்டு ஆலயம் அமைப்பதற்கான காணி எங்களுக்கு அமைந்தது.
மேலும் இந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நூதன ஆலயம் அமைப்பதற்கான அனுமதி அரசாங்கத்தாலே பெறப்பட்டு பூர்வாங்க பணிகள் துவங்கப்பெற்று ஆலயத்தின் ஓர் அங்கமான திருமணமண்டப வேலைகள் முதலில் முடிவு பெற்றது. அதன்பின் பிரதி வருடம் 2021 நொவம்பர் மாதம் 21ம் நாள் எங்களின் வரசித்திவிநாயகர் ஆலயத்தின் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று ஏனைய ஆலய பணிகள் முடியும் வரையில் நூதன ஆலய மண்டபத்தில் வைத்து எல்லா விதமான பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.
மேலும் திருப்பணிகள் சிறப்புற முடிவுபெற்று சோபக்ருத் ஆண்டு 29/06/2023 ஆண்டு ஆலய மஹா கும்பாபிஷேகமானது சிவாகம அடிப்படையில் பூர்வாங்க கிரியைகளுடன் துவங்கப்பெற்று சிறப்புடன் நடைபெற்றது. மேற்கண்ட அணைத்து வேலைகளுக்கும் எங்களுடன் பொருளாலும் உடல் உழைப்பாலும் ஏனைய பிற வழிகளிலும் உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
இங்ஙனம்,
ஆலய நிர்வாகம்
ஆலய நிர்வாகம்
முருகதாஸ் காராளசிங்கம் தலைவர்
பத்மகரன் பத்மநாதன் பொருளாளர்
ஆனந்தராஜா சின்னராசா செயலாளர்
சந்தராணி பத்மகுமார் உப தலைவர்
வினோதராஜ் தியாகராசா உப பொருளாளர்